/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
185 நாளுக்கு பின் பாசன நீர் நிறுத்தம்
/
185 நாளுக்கு பின் பாசன நீர் நிறுத்தம்
ADDED : ஜன 29, 2025 01:13 AM
185 நாளுக்கு பின் பாசன நீர் நிறுத்தம்
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., ஆண்டுதோறும் அணையில் இருந்து ஜூன், 12 முதல் ஜன., 28 வரை, 231 நாட்கள், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும்.
கடந்த ஆண்டு, 47 நாட்கள் தாமதமாக, ஜூலை, 28ல், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால், 2 லட்சம் ஏக்கர் குறைவாக, 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது டெல்டாவில் நெல் சாகுபடி நிறைவடைந்ததால், 185 நாட்களுக்கு பின், நேற்று மாலை, 6:00 மணிக்கு, மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் முதல் நேற்று வரை, அணைக்கு, 286 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. இதில், 150 டி.எம்.சி., நீர் பாசனத்துக்கும், 49 டி.எம்.சி., உபரியாகவும், 7.6 டி.எம்.சி., கால்வாய் பாசனத்துக்கும் திறக்கப்பட்டது.
நேற்று அணை நீர்மட்டம், 110.75 அடி, நீர் இருப்பு, 79.47 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 450 கன அடி நீர் வந்தது. பாசன நீர் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீருக்கு மட்டும், நேற்று மாலை, 6:00 மணி முதல், அணை, 8 கண் மதகு வழியே வினாடிக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அணை, சுரங்க, கதவணை மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

