ADDED : ஜன 24, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
சேலம், :  சேலம், ஜான்சன்பேட்டை, கண்ணாங்காடு ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஜீவானந்தம், 21, கோபிநாத், 26. இவர்கள் கடந்த, 3ல், காரிப்பட்டியில் முகேஷ்கண்ணன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 900 ரூபாயை பறித்தனர். அதேபோல் மக்களிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தி வந்தனர். இதனால் அஸ்தம்பட்டி போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இருவரும், 2022 முதல், 2024 வரை தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார். இதில் கோபிநாத் மீது, ஏற்கனவே, 2022ல் குண்டாஸ் பாய்ந்தது.

