/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறை அங்காடியில் பணமோசடி2 போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
/
சிறை அங்காடியில் பணமோசடி2 போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 06, 2025 01:24 AM
சிறை அங்காடியில் பணமோசடி2 போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
சேலம்:சிறை அங்காடியில் பண மோசடியில் ஈடுபட்ட ௨ ஏட்டுகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.சேலம் மத்திய சிறை வாசலில், கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்யும் பல்பொருள் அங்காடி செயல்படுகிறது.
அங்கு வரும் வருமானத்தை, சிறைத்துறை வங்கி கணக்குக்கு, 'ஜிபே' மூலம் அனுப்பி வந்தனர். கடந்த செப்டம்பர், அக்டோபரில், அங்காடியில் பணியில் இருந்த ஏட்டுகளான அபிமன்னன், 34, பாண்டி, 30, ஆகியோர், உறவினர்கள் மூலம் பொருட்களை விற்று, அவர்கள் வங்கி கணக்குக்கு பணத்தை, 'ஜிபே' செய்து, மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, சிறை
எஸ்.பி., வினோத், நேற்று உத்தரவிட்டார்.

