/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு
/
புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு
ADDED : ஏப் 10, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு'
ஓமலுார்:சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர், காடையாம்பட்டி, நாச்சனம்பட்டியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில், 3 பேர், புனுகு பூனை கறியை வெட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது.
வனத்துறையினரை பார்த்ததும், அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டனர். மீதி, 2 பேரை பிடித்து விசாரித்ததில், பண்ணப்பட்டியை சேர்ந்த விஜயகுமார், 20, தர்மபுரி மாவட்டம் வேப்பிலை சசிகுமார், 30, என தெரிந்தது.
இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடியவர், நாச்சனம்பட்டி அருள், 27, என தெரிந்தது. அவரை, வனத்துறையினர் தேடுகின்றனர்.

