/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே கோட்டத்தில்207 பேர் மீது வழக்கு
/
ரயில்வே கோட்டத்தில்207 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 22, 2025 01:27 AM
ரயில்வே கோட்டத்தில்207 பேர் மீது வழக்கு
சேலம்:ராணிப்பேட்டையில், சமீபத்தில் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ரயில்வே ஸ்டேஷன்களில், பெண்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டேஷனில் பெண்கள் கோச் பகுதியில் சந்தேகப்படும்படி நடமாடும், சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று, சேலம் ரயில்வே ஸ்டேஷனில், 40 பேர், ஜோலார்பேட்டை, 60, காட்பாடி, 43, தர்மபுரி, 26, ஓசூர், 38 என, சேலம் கோட்டத்தில், 207 பேர் மீது சந்தேக வழக்குப்பதிந்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

