/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
23 வரை வேளாண் வானிலை முன்னறிவிப்பு
/
23 வரை வேளாண் வானிலை முன்னறிவிப்பு
ADDED : பிப் 20, 2025 01:46 AM
23 வரை வேளாண் வானிலை முன்னறிவிப்பு
பனமரத்துப்பட்டி:சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் அறிக்கை: சேலம் மாவட்டத்தில் வரும், 23 வரையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த கணிப்பின்படி வறண்ட தெளிவான வானிலை காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 30 முதல் 67 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்சம், 18 முதல், 19 டிகிரி செல்ஷியஸ் இருக்கும். காற்றின் ஈரப்பதம், 30 முதல் 67 சதவீதம் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு, 10 கி.மீ.,ல், கிழக்கில் இருந்து வீசக்கூடும்.
தற்போது மா மரங்கள் பூ பூக்கும் பருவம் என்பதால், மண்ணின் ஈரத்தன்மை மற்றும் நிலவும் வெப்ப நிலையை பொறுத்து நீர் பாய்ச்சுவது அவசியம். சீரான இடைவெளியில் நீர் பாசனம் அளிப்பதால், பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை தடுக்கும். வாழையில் மகசூலை அதிகரிக்க, ஒரு லிட்டருக்கு, 20 கிராம் வீதம், வாழை பூஸ்டர் எலுமிச்சை சாறுடன் கலந்து, வாழை நட்ட, 3, 5, 7ம் மாதங்களில் இலை வழி தெளிக்க வேண்டும்.
கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து காக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைளில் வைத்து பராமரிக்க வேண்டும். கொட்டகையின் மேற்கூரையில் தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி, அதன் மீது தண்ணீர் தெளித்து, வெப்பத்தில் இருந்து கால்நடைகளை காக்கலாம். ஒரு கறவை பசுக்கு, தினமும், 30 முதல், 50 கிராம் அடர் தீவனத்துடன் தாது உப்பு கலவை அளிக்கலாம்.

