/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தொழிலாளர் ஊதியம்ரூ.26,000 வழங்கணும்'
/
'தொழிலாளர் ஊதியம்ரூ.26,000 வழங்கணும்'
ADDED : மார் 15, 2025 02:25 AM
'தொழிலாளர் ஊதியம்ரூ.26,000 வழங்கணும்'
சேலம்:சேலத்தில், 8 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மண்டல மாநாடு நேற்று நடந்தது. தொ.மு.ச., பழனியப்பன் தலைமை வகித்தார். சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
சி.ஐ.டி.யு., தமிழ் மாநில பொதுச்செயலர் சுகுமாறன் பேசுகையில், ''தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக பயன்படுத்தி, தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை, அரசு பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.
தொ.மு.ச., அகில இந்திய தலைவர் நடராஜன் பேசுகையில், ''தொழிலாளர் விரோத, 4 சட்ட தொகுப்பை ரத்து செய்வதோடு, 3 குற்றவியல் கொடூர சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர். இதையடுத்து தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதியம், 26,000 ரூபாய் வழங்குதல்; பொதுத்துறை, அரசு துறைகள் தனியார் மயமாவதை தடுத்தல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் கோவிந்தன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலர் சின்னசாமி, எச்.எம்.எஸ்., மாநில செயலர் ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.