/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிளினிக்கில் ரூ.27,000 திருட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை
/
கிளினிக்கில் ரூ.27,000 திருட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை
கிளினிக்கில் ரூ.27,000 திருட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை
கிளினிக்கில் ரூ.27,000 திருட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : பிப் 13, 2025 01:07 AM
கிளினிக்கில் ரூ.27,000 திருட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை
சேலம்:சேலம், நரசோதிப்பட்டியில், டாக்டர் முத்தரசு என்பவர் கிளினிக் நடத்தினார். 2023 நவ., 10ல், கிளினிக்கை மூடிச்சென்றார்.
நவ., 13ல் கிளினிக் வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 27,000 ரூபாய் திருடுபோயிருந்தது. சூரமங்கலம் போலீசார் விசாரித்து, சேலம், ஜாகீர் அம்மாபாளையம், அவ்வை நகரை சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 2ல் நடந்தது. மணிகண்டனுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 400 ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார்.
சர்வோதய சங்கத்தில் ரூ.3.67 கோடி கையாடல்செயலர் உள்ளிட்ட பணியாளர்கள் மீது வழக்குசேலம், :சென்னை, காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணைய மாநில தலைவர் சுரேஷ், அங்குள்ள டி.ஜி.பி., அலுவலகத்தில், சமீபத்தில் அளித்த மனு:
ஆணைய கட்டுப்பாட்டில், சேலம் மாவட்டம் ஆத்துார், பாரதிபுரம் சர்வோதய சங்கம் இயங்குகிறது. அதன் வரவு, செலவு கணக்கு மும்பை தலைமை அலுவலகத்தில் சிறப்பு தணிக்கை செய்யப்பட்டது. அதில், 2018 முதல், 2021 வரை, போலி ரசீது உள்ளிட்ட பல்வேறு வகைகளில், செயலர் ஆறுமுகம், நெசவு தொழிலாளி வேல்முருகன், அலுவலக பணியாளர்கள், 3.67 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதுகுறித்து விசாரிக்க, சேலம் எஸ்.பி., அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஆறுமுகம், வேல்முருகன், அலுவலக பணியாளர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.