/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்மாற்றியில் தொங்கியபடி ஒயர்மேன் பலி வாரியத்தில் 3 மாதங்களில் 3 பேர் உயிரிழப்பு

ADDED : ஆக 11, 2024 02:50 AM
பெத்தநாயக்கன்பாளையம்: மின்மாற்றியில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் ஒயர்மேன் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதேபோல் மின்வாரியத்தில், 3 மாதங்களில், 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், ஆரியபாளையம் அருகே தெற்குகாட்டை சேர்ந்தவர் செல்வராஜ், 49. ஏத்தாப்பூரில் மின்வாரிய ஒயர்மேனாக பணிபுரிந்தார்.
நேற்று மதியம், 12:30 மணிக்கு, ஏத்தாப்பூர், ஆண்டவர் நகரில் மின்மாற்றி பழுதுபார்ப்பு பணிக்கு ஏறியபோது, மின்சாரம் பாய்ந்து அதில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். மின்வாரிய அதிகாரிகள், மின்சாரத்தை துண்டித்து செல்வராஜ் உடலை மீட்-டனர். ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மின்சாரத்தை துண்டிக்காமல் கவனக்குறைவாக மின்மாற்றியில் ஏறியதால் செல்வராஜ் இறந்தது தெரியவந்தது' என்றனர்.
அதேபோல் கடந்த ஜூன், 4ல் வாழப்பாடி அருகே வெள்ளாள-குண்டத்தில் ஒயர்மேன் கண்ணன், 45, என்பவரும், ஜூலை, 20ல் வாழப்பாடியில் ஒயர்மேன் சின்னதுரை, 57, என்பவரும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின்கம்பம் மற்றும் மின்மாற்-றியில் தொங்கிய நிலையில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளர் முல்லை கூறுகையில், ''வழக்கமாக செய்யும் பணிதான். மறந்த நிலையில் கவனக்குறைவாக ஒயர்மேன் பணி புரியும்போது இதுபோன்று விபத்து நேரிடுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்-படும்,'' என்றார்.