/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்குரூ.32.62 லட்சம் நிதி வழங்கல்
/
நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்குரூ.32.62 லட்சம் நிதி வழங்கல்
நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்குரூ.32.62 லட்சம் நிதி வழங்கல்
நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்குரூ.32.62 லட்சம் நிதி வழங்கல்
ADDED : ஏப் 01, 2025 01:45 AM
நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்குரூ.32.62 லட்சம் நிதி வழங்கல்
நாமக்கல்:மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட சங்கங்கள், தங்களது ஆண்டு நிகர லாபத்தில் இருந்து, கூட்டுறவு ஒன்றியத்திற்கு, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி,
கூட்டுறவு கல்வி நிதி வழங்கி வருகிறது. அதன்படி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, 2023-24ம் ஆண்டு நிகர லாபத்தில், நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, 19 லட்சத்து, 56,891 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி, 13 லட்சத்து, 4,594 ரூபாய் என, மொத்தம், 32 லட்சத்து, 61,485 ரூபாய்க்கான காசோலையை, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் சதீஸ்குமார், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் சரவணனிடம் வழங்கினார். சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் நாமக்கல் கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.