/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாப்ட் டென்னிஸ் வீரர்களுக்கு 40 நாள் சிறப்பு பயிற்சி முகாம்
/
சாப்ட் டென்னிஸ் வீரர்களுக்கு 40 நாள் சிறப்பு பயிற்சி முகாம்
சாப்ட் டென்னிஸ் வீரர்களுக்கு 40 நாள் சிறப்பு பயிற்சி முகாம்
சாப்ட் டென்னிஸ் வீரர்களுக்கு 40 நாள் சிறப்பு பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 22, 2024 07:00 AM
ஓமலுார் : கொரியா நாட்டில், 17வது உலக சாப்ட் டென்னிஸ் சாம்பி-யன்ஷிப் போட்டி செப்., 1 முதல், 10 வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்-பட்டுள்ளனர்.
அதில் பெண்கள் அணியில் தமிழக வீராங்கனைகளான வேலுாரை சேர்ந்த ராகஸ்ரீ, சேலம் திருமங்கை, கரூர் யாழினி மட்-டுமின்றி, அரியானா நிகிதா, ஆந்திரா அனுஷா, மத்திய பிரதேசம் ஆதியா திவாரி உள்ளனர். ஆண்கள் பிரிவில் குஜராத்தின் அனிகேத் படேல், ராஜ்வீர், மத்திய பிரதேசம் ஜெய்மீனா, ஆதித்யா துாபே, யோகேஷ், டில்லி மைத்ரேயரானா என, 6 பேர் உள்ளனர்.
இந்த, 12 பேருக்கும், தமிழக சாப்ட் டென்னிஸ் சங்கம் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் சேலம் மாவட்டம் ஓமலுாரில் உள்ள சாப்ட் டென்னிஸ் மைதானத்தில், 40 நாள் பயிற்சி, கடந்த, 19ல் தொடங்கி நடந்து வருகிறது. ஆக., 27 வரை, தமிழக பயிற்சியா-ளர்கள் அசோக்குமார், கார்த்திக் பயிற்சி அளிக்கின்றனர். முகாம் தொடக்க விழாவில், இந்திய சாப்ட் டென்னிஸ் கூட்டமைப்பு செயல் அலுவலர் வெக்டா, தமிழக சாப்ட் டென்னிஸ் சங்க தலைவர் செந்தில்குமார், செயலர் கவிதா செம்பண்ணன் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.