ADDED : பிப் 01, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீண்டும் 6 குட்டி ஈன்றெடுத்த ஆடு
வாழப்பாடி:வாழப்பாடி அருகே அண்ணா நகரை சேர்ந்த விவசாயி முருகன், 39. இவர் வளர்த்த ஒரு ஆடு, 2023 ஆக., 17ல், ஒரே நேரத்தில், 6 குட்டிகளை ஈன்றது.
இந்நிலையில் நேற்றும், அதே ஆடு, மீண்டும், 6 ஆட்டுக்குட்டிகளை ஈன்றது. இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்து, ஆடு, குட்டிகளை வந்து பார்த்து சென்றனர்.