ADDED : செப் 02, 2024 02:19 AM
இடைப்பாடி: இடைப்பாடி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை மூலம், 63 நாயன்மார், 9 தொகை அடியார், 4 சந்தன குறவர், ஒரு பிட்சா-டனர் என, செம்பு, பித்தளையால் செய்யப்பட்ட, 1.5 அடி உயர-முள்ள, 76 சிலைகள், அங்குள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ளன. அங்கு, 18ம் ஆண்டாக, 63 நாயன்மார்கள் குருபூஜை விழா, கடந்த, 30ல் தொடங்கியது. அதில் வள்ளிகும்மி ஆட்டம், சேக்கிழாரின் சொற்பொழிவு நடந்தது.
நேற்று நஞ்சுண்டேஸ்வரர், 63 நாயன்மார், மாமன்னர் ராஜராஜன் சிலைகள் ஊர்வலம் நடந்தது. கோவிலில் புறப்பட்ட ஊர்வலம் முஸ்லிம் தெரு, கடைவீதி, பவானி சாலை, பூலாம்பட்டி சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியே மீண்டும்
கோவிலை அடைந்தது. சிவகு-ருநாதர்கள் உள்ளிட்ட சிவபக்தர்கள், சிவனடியார் திருக்கூட்ட சிவ-னடியார்கள், கைலாய வாத்தியங்களுடன் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.