/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிப்., 7ல் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
/
பிப்., 7ல் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
ADDED : ஜன 29, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிப்., 7ல் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
சேலம்: சனாதன தர்ம வித்ய பீடம் சார்பில், 6ம் ஆண்டு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி, சேலம், கோட்டை, குண்டு போடும் தெருவில் உள்ள கமலா மஹால் மண்டபத்தில், வரும் பிப்., 7ல் நடக்க உள்ளது. அதில், எல்.கே.ஜி., முதல், 2ம் வகுப்பு வரையான மாணவர்கள், 1 முதல், 3 திருப்பாவை பாசுரங்கள் ஒப்புவிக்க வேண்டும். அதேபோல், 3 முதல், 5ம் வகுப்பு வரை, 4 - 8 பாசுரங்கள்; 6 முதல், 8ம் வகுப்பு வரை, 9 - 18 பாசுரங்கள், 9, 10 வகுப்பு மாணவர்கள், 16 - 30 பாசுரங்கள் வரை ஒப்புவிக்க வேண்டும். கூடுதல் தகவல் பெற, 94422 67889 என்ற எண்ணில் அழைக்கலாம் என, செயலர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

