/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாரச்சந்தை சுங்க வசூல்ரூ.7.63 லட்சத்துக்கு ஏலம்
/
வாரச்சந்தை சுங்க வசூல்ரூ.7.63 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஏப் 03, 2025 01:53 AM
வாரச்சந்தை சுங்க வசூல்ரூ.7.63 லட்சத்துக்கு ஏலம்
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 2024 - 2025ம் ஆண்டில், தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்ட வாரச்சந்தை, தினசரி சுங்க வசூல், மார்ச், 31ல் முடிந்தது. கடந்த பிப்ரவரி முதல் வாரச்சந்தை ஏலம், 3 முறை, தினசரி ஏலம் இரு முறை நடந்தது. டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் எதிர்பார்த்தபடி யாரும் ஏலம் கோரவில்லை.
நேற்று முன்தினம், 4ம் முறை வாரச்சந்தை ஏலம், 3ம் முறை தினசரி சுங்க வசூல் ஏலம் நடந்தது. சந்தை, 7.63 லட்சம் ரூபாய், தினசரி சுங்க வசூல், 82,000, ஆடு அடிக்கும் தொட்டி, 32,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
இதுகுறித்து, டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள் கூறுகையில், 'இந்த ஏலத்தொகைக்கு கவுன்சிலர் கூட்டத்தில் ஒப்புதல் அளித்த பின், இறுதி செய்யப்படும். இன்னும் கூடுதல் தொகை ஏலம் விடலாம் என, கூட்டத்தில் தெரிவித்தால் மீண்டும் ஏலம் நடத்தப்படும்' என்றனர்.