/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் விஷவாயு தாக்கி 9 பேர் பலி
/
கிணற்றில் விஷவாயு தாக்கி 9 பேர் பலி
ADDED : ஜூலை 06, 2024 06:48 AM
கோர்பா : சத்தீஸ்கரில், கிணற்றை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டம், கிகிர்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திர ஜெய்ஸ்வால், 60. இவர் வீட்டின் பின்புறம் 30 அடி ஆழம், 5 அடி அகலத்தில் கிணறு உள்ளது. அதில் விழுந்த மரக்கட்டையை எடுக்க கிணற்றில் இறங்கிய அவர், விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்தார்.
அவரை காப்பாற்ற சென்ற பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரமேஷ் படேல், 50, அவரது மகன் ராஜேந்திரா, 20, ஜிதேந்திரா, 25 ஆகிய மூவரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைய-டுத்து, திகேஷ் சந்திரா, 25 என்பவரும் கிணற்றுக்குள் இறங்கிய நிலையில், அவரும் மயங்கி விழுந்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி பார்த்தபோது, ஐந்து பேரும் இறந்திருந்தது தெரியவந்தது.
இதே போல் கோப்ரா பகுதியில் விவசாய நிலத்தில் பணியில் இருந்த ஜாஹுரு படேல், 60, என்பவர் கிணற்றில் இறங்கிய-போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற படேலின் மகள் உள்ளிட்ட மூன்று பேர் அடுத்தடுத்து இறந்தனர்.
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் விஷ-வாயு தாக்கி ஒன்பது பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப-டுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 9 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.