/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரிவாளுடன் சுற்றிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
/
அரிவாளுடன் சுற்றிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஆக 09, 2024 02:30 AM
சேலம்: சேலம், திருமலைகிரியை சேர்ந்தவர் மணிகண்டன், 23.
இவர் கடந்த மாதம், 14ல் திருமலைகிரி, வள்ளுவர் நகரில் வீச்சரிவா-ளுடன் சுற்றி மக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டார். அத்-துடன் அதே பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரனை தகாத வார்த்-தையில் பேசி, அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, மணிகண்டனை, போலீசார் கைது செய்தனர். அவர் மீது, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, இரும்பாலை போலீசார் பரிந்-துரைப்படி, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, குண்டர் சட்டத்தில் மணிகண்டனை கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.