/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் ஏறிய போது சிக்கிய மாணவர் பயணிகள் கூச்சலிட்டதால் தப்பினார்
/
ரயிலில் ஏறிய போது சிக்கிய மாணவர் பயணிகள் கூச்சலிட்டதால் தப்பினார்
ரயிலில் ஏறிய போது சிக்கிய மாணவர் பயணிகள் கூச்சலிட்டதால் தப்பினார்
ரயிலில் ஏறிய போது சிக்கிய மாணவர் பயணிகள் கூச்சலிட்டதால் தப்பினார்
ADDED : ஆக 17, 2024 04:49 AM
சேலம்: ஓடும் ரயிலில் ஏறிய போது, சிக்கிய கல்லுாரி மாணவர் அதிர்ஷ்ட-வசமாக உயிர் தப்பினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசநத்தி கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் தருண். சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கோவைக்கு சென்றிருந்த தருண், நேற்று காலை நண்பர்களுடன் கல்லுாரி செல்வதற்காக கோவை சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்-பிரஸ் ரயிலில் பயணித்தார். நேற்று காலை, 8:54 மணிக்கு சேலத்-துக்கு ரயில் வந்தது.
ஐந்தாவது பிளாட்பார்மில் ரயில் நின்றது. தருண் கீழே இறங்கி கடையில், தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டிருந்தார். ரயில் புறப்பட்டதால், வேகமாக ஓடி, பெட்டியில் ஏறினார். அப்போது படிக்கட்டில் கால்தவறி பிளாட்பார்முக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்தார். இதனால் ரயிலுக்கு இடையில் சிக்கிக் கொண்டு அலறினார். பயணிகள் கூச்சலிட்டதால், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தருணை பயணிகள், போலீசார் மீட்டனர். கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக தருண் உயிர் தப்பினார்.
சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

