/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை மாரியம்மன் கோவில் 7 ஆண்டுக்கு பின் உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

ADDED : ஆக 01, 2024 08:07 AM
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை-யொட்டி, நேற்று முன்தினம் கம்பம் நடும் விழா நடந்தது. தொடர்ந்து நேற்று அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்-வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராள-மான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் நடப்-பட்ட கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து, வேண்டுதல் நிறைவேற்றி தந்த அம்மனுக்கு, ஏராளமான பக்-தர்கள் உருளுதாண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். 7 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த உருளுதாண்ட நேர்த்திக்கடன், இந்த ஆண்டு ஆடித்திருவிழாவில் நடந்தது. கம்பம் நடும் விழா
ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நேற்று நடந்தது. இதற்கு நேற்று மாலை, வேலநத்தம் பாவ-டியில் கம்பத்துக்கு மஞ்சள் குங்குமம் பூசி மலர்களால் அலங்க-ரித்து, மேள தாளம் முழங்க, பக்தர்கள் புடைசூழ கம்பத்தை கோவிலுக்கு சுமந்து வந்தனர். தொடர்ந்து அங்கு, 'ஓம்சக்தி, பரா-சக்தி' கோஷம் முழங்க, கொடி மரத்துக்கு முன் கம்பம் நடப்பட்-டது.
வரும், 5ல் தேர் ஆயக்கால் போடுதல், 8ல் கொடியேற்றம், 13ல் சத்தாபரணம், 14ல் குண்டம் இறங்குதல், தேரோட்டம், 15ல் பொங்கல் வைத்தல், கம்பம் ஆற்றில் விடுதல், 16ல் வண்டி வேடிக்கை, 'உடற்கூறு' நடன நிகழ்ச்சி, 17ல் மஞ்சள் நீராட்டு வைபவம், ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
மேலும் இன்று முதல் விழா நிறைவு நாள் வரை தினமும் இரவு உற்சவர் மாரியம்மன் விதவித அலங்காரங்களில் வீதிஉலா வருவார்.