/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீண்டும் சேதமான குழாய் அதிகளவில் குடிநீர் வீண்
/
மீண்டும் சேதமான குழாய் அதிகளவில் குடிநீர் வீண்
ADDED : ஆக 31, 2024 01:31 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, சந்தியூர் பிரிவில் மேம்பால கட்டுமானப்பணிக்கு, மூக்குத்திபாளையம் ஏரியில் மொரம்பு மண் எடுக்கப்படுகிறது. அங்கு மண் பாரம் ஏற்றிய கனரக டிப்பர் லாரிகள், அம்மாபாளையம் வழியே பால
வேலை நடக்கும் இடத்துக்கு செல்கிறது. ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் அதிக பாரத்தால் தார்ச்சாலை சேதமடைகிறது.
குறிப்பாக அம்மாபாளையம், காட்டூர் அருகே மண் பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால், வாணியம்பாடி நீருந்து நிலையத்தில் இருந்து பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் நசுங்கி தண்ணீர்
வெளியேறியது. கடந்த, 24ல் குடிநீர் குழாய் உடைப்பை, குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சரிசெய்தனர். ஆனால் நேற்று அதே இடத்தில் மீண்டும் குழாய் சேதமடைந்து, முன்பை விட அதிகளவில் காவிரி குடிநீர் வெளியேறி வீணாகி
வருகிறது.