ADDED : ஆக 04, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி, ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மெய்வேல், 70.
விவசாய கூலி தொழிலாளி. இவர் மனைவி, மகனுடன் வசித்தார். நேற்று இடைப்பாடியில் உள்ள மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சென்றுவிட்டு, காலை, 9:00 மணிக்கு வீட்டுக்கு செல்வதற்கு இடைப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலைக்கு சைக்கிளில் வந்தார். அப்போது இடைப்பாடியில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், மெய்வேல் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் மெய்வேல் இறந்தார். அவரது மகன் பிரபு புகார்படி இடைப்பாடி போலீசார், பஸ் டிரைவர் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.