/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
/
ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : ஆக 03, 2024 01:25 AM
சேலம், சேலம், சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
இதில் ஜெய்ராம் கல்லுாரி, ஜெய்ராம் பள்ளி தலைவர் ராஜேந்திரபிரசாத், பள்ளி தாளாளர் தினேஷ், பத்மா, கல்லுாரி தாளாளர் மணிகண்டன், ஜெய்ராம் பப்ளிக் பள்ளி முதல்வர் பால் சேவியர், ஜெய்ராம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செல்வராஜ் ஆகியோர், மாணவர்களை வாழ்த்தினர்.
டாக்டர் சசிக்குமார் தேவராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து மாணவர்களின் வண்ணமிகு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. கராத்தே, சிலம்பம், யோகா, ஸ்கேட்டிங், வில்வித்தை, பாராஷூட் ரிலே மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு
போட்டிகள் நடந்தன.
மேலும் தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இந்த விழாவை, ஜெய்ராம் பள்ளி விளையாட்டு துறை ஆசிரியர்கள் சரவணன், சித்திரலேகா, கீதா, மதிசூதனன், கரண், பவித்ரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் பெற்றோர், மாணவர்களை ஊக்கப்
படுத்தினர்.