/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஸ்கேல்' தராசுகளால் விளைபொருட்கள் அளவில் முறைகேடு ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்க விவசாயிகள் குமுறல்

ADDED : ஆக 11, 2024 02:47 AM
ஆத்துார்: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி, மஞ்சள் உள்ளிட்ட-வற்றை எடை போட, மின்னணு தராசு இருந்தும், பழைய, 'ஸ்கேல்' தராசுகளை பயன்படுத்துவதால் எடை குறைவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டையில் வேளாண் உற்-பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. அங்கு, 27,000 உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாரந்தோறும் பருத்தி, மஞ்சள், எண்ணெய் வித்து, தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஏல முறையில் வியாபாரிகள் வாங்குகின்றனர். இதில் பருத்தி, மஞ்சள் மூலம் ஆண்டுதோறும், 80 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை மஞ்சள் மூலம், 46.32 கோடி, பருத்தி மூலம், 16.62 கோடி என, 63.04 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்துள்ளது.
ஆனால் மஞ்சள் எடை போட, 6 மாதங்களுக்கு முன் புதிதாக வாங்கப்பட்ட மின்னணு தராசுகளை பயன்படுத்துவதில்லை. மாறாக பழைய இரும்பு, 'ஸ்கேல்' தராசுகளில் எடை போடு-வதால் துல்லிய அளவு தெரிவதில்லை. இதனால் எடை அளவில் முறைகேடு நடப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்க விற்பனை பிரிவு அலுவலர் சாமிநாதன் கூறுகையில், ''பருத்தி, மஞ்சள் கொள்-முதல் செய்வதற்கு, 9,500 மெட்ரிக் டன் கொண்ட, 12 குடோன்கள் உள்ளன. இதில் மஞ்சளுக்கு, 9 குடோன்கள் பயன்ப-டுத்தப்படுகின்றன. முத்திரை போடப்பட்ட, 15 'ஸ்கேல்' தராசு-களை தான் பயன்படுத்துகிறோம். மின்னணு தராசுகளை சோதனை முறையில் பயன்படுத்தியபோது, நகர்த்திச்சென்று மஞ்சள் மூட்டை அடுக்கி வைத்துள்ள இடங்களில் எடை போடு-வதில் சிரமம் இருந்தது. சில நேரங்களில் செயல்படவும் இல்லை. இரவில், 'ஸ்கேல்' தராசுகளில் எடை போட்டாலும் அளவு குறைய வாய்ப்பில்லை. விவசாயிகளுக்கு பாதிப்பின்றி எடை, விலை வழங்குகிறோம்,'' என்றார்.