/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மது' விற்பனையாளரை தாக்கியவர் மீது வழக்கு
/
'மது' விற்பனையாளரை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : செப் 02, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலத்தை சேர்ந்த செந்தில்நாதன், 47, ஏரிக்கொடி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது அங்கு வந்த கோழிக்கட்டானுாரை சேர்ந்த அஜித், பீர் கேட்டுள்ளார்.
அதை எடுத்துக்கொடுத்து விட்டு, பணம் கேட்டபோது அஜித், செந்தில்நாதனை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். காயம் அடைந்த அவர், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாரமங்கலம் போலீசார், அஜித் மீது
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.