ADDED : ஆக 01, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழகம் முழுதும், 2022ல், 49 போலீஸ் ஸ்டேஷன்கள், சிறந்த-தாக தேர்வாகின.
அதில் சேலம், அன்னதானப்பட்டி ஸ்டேஷனும் அடங்கும். இதற்கு விருது வழங்கும் விழா சென்-னையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டராக இருந்த சின்ன-தங்கம், விருதை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர், கமி-ஷனர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது துணை கமிஷனர் மதிவாணன், உதவி கமிஷனர் ராம-மூர்த்தி உடனிருந்தனர். சின்னதங்கம், தற்போது இரும்பாலை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார்.