/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமி உடலை பெற 2வது நாளாக மறுப்பு
/
சிறுமி உடலை பெற 2வது நாளாக மறுப்பு
ADDED : ஆக 25, 2024 07:38 AM
சேலம்: திருச்செங்கோடு சிறுமி உடலை வாங்க, இரண்டாவது நாளாக உறவினர்கள் மறுத்து விட்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சத்திநாயக்கன்பா-ளையத்தை சேர்ந்த பிரபு மகள் தஷ்மிதா, 11; பக்கத்து வீட்டை சேர்ந்த மென்பொறியாளர் செந்தில்குமார் கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற சிறுமியின் உறவினர்கள் இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. திருச்செங்கோடு ஊரக போலீசார், 'போக்சோ' உள்ளிட்ட பிரிவு-களில், செந்தில்குமாரை கைது செய்தனர்.
இதனிடையே சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்ட சிறுமி கடந்த, 22ல் உயிரிழந்தார். சிறுமியின் குடும்பத்-துக்கு இழப்பீடாக, 3 லட்சம் ரூபாய், 3 சென்ட் நிலம், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வழங்குவதாக அரசு அறிவித்தது.
ஆனால், சிறுமியின் உறவினர்கள், 25 லட்சம் ரூபாய் வேண்டும்; குடும்-பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும்; செந்தில்குமாருக்கு துாக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் நாளாக நேற்றும் உடலை பெற மறுத்து விட்டனர். இதனால் போலீசார் தொடர்ந்து
சிறுமியின் குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்-றனர்.