/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு தொடக்க விழா
/
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு தொடக்க விழா
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு தொடக்க விழா
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு தொடக்க விழா
ADDED : ஆக 29, 2024 01:44 AM
சேலம், ஆக. 29-
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் இளநிலை, முதுநிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார்.
பெங்களூர் டோரி ஹாரிஸ் நிறுவன வினியோக தலைவர் நிரஞ்சனதேவி, சோனா கல்லுாரி முன்னாள் மாணவரான, டில்லி லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் இந்தியா லிமிடெட் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி கணேஷ்மூர்த்தி, கல்லுாரி நிர்வாகத்தினர், மாணவ மாணவியர், பெற்றோர் குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கி வைத்தனர். துறைத்தலைவர் சத்தியபாமா வரவேற்றார்.
துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்து பேசுகையில், ''மாணவ, மாணவியருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லுாரி காத்திருக்கிறது. அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும்,'' என கேட்டுக்கொண்டனர். பின் கல்லுாரி வசதிகள் குறித்து முதல்வர் செந்தில்குமார் எடுத்துரைத்தார்.
சோனா கல்வி குழும முதல்வர்கள் கார்த்திகேயன், காதர்நவாஷ், எம்.பி.ஏ., துறைத்தலைவர் அஞ்சனி உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டை துறைத்தலைவர் ரேணுகா உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

