ADDED : ஆக 08, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,
சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. அமைச்சர்கள் நேரு, சாமிநாதன், பொருட்காட்சியை தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, வருவாய், வேளாண் - உழவர் நலன், கூட்டுறவு, குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், சேலம் மாநகராட்சி என, 34 அரங்குகள் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாலையில் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து, 45 நாட்கள் பொருட்காட்சி நடத்தப்படும். இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.