/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 3,665 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

ADDED : ஜூலை 08, 2024 04:59 AM
வீரபாண்டி : சேலம் மாவட்டம் அரியானுாரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின், 17வது பட்டமளிப்பு விழா, சீரகாபாடி விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லுாரி அன்னபூர்ணா கலையரங்கில் நேற்று நடந்தது.
பல்கலை வேந்தர் கணேசன் தலைமை வகித்தார். துணை வேந்தர் சுதிர் ஆண்டறிக்கை வாசித்தார். புதுச்சேரி, 'ஜிப்மர்' மருத்துவ கல்வி நிறுவன தலைவர் விஸ்வ மோகன் கடோச், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பத்மஸ்ரீ விருது பெற்ற, 'பாலம்' கல்யாணசுந்தரம், திருவிதாங்கூர் இளவ-ரசி அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய் ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 75 பேருக்கு முனைவர் பட்டம், 113 பேருக்கு தங்க பதக்கம், 96 பேருக்கு வெள்ளி பதக்கம், 77 பேருக்கு வெண்கல பதக்கம் உள்பட, 3,665 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் அனுராதா, துணைத்தலைவர் சந்திரசேகர், இயக்குனர்கள் அருணாதேவி, ஜெகநாதன், கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லுாரி நிர்வாக இயக்குனர்(வளாக வளர்ச்சி) கோகுல கிருஷ்ணன் சரவணன், பல்-கலை பதிவாளர் நாகப்பன் உள்ளிட்ட பேராசியர்கள் பங்கேற்-றனர்.