/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி கல்வித்துறையில் உதவியாளர் 26 பேருக்கு நியமன ஆணை வழங்கல்
/
பள்ளி கல்வித்துறையில் உதவியாளர் 26 பேருக்கு நியமன ஆணை வழங்கல்
பள்ளி கல்வித்துறையில் உதவியாளர் 26 பேருக்கு நியமன ஆணை வழங்கல்
பள்ளி கல்வித்துறையில் உதவியாளர் 26 பேருக்கு நியமன ஆணை வழங்கல்
ADDED : ஆக 01, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2ல், அரசு உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு, 448 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு, ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. அதில் சேலம் மாவட்டத்தில் தேர்வான, 30 பேருக்கு, ஆன்லைன் கலந்தாய்வு, கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
அதில் மாநில முன்னுரிமை பட்டியல் அடிப்படையில், 26 பேர், விருப்ப இடங்களை தேர்வு செய்து, பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டனர். 4 பேர் பங்கேற்கவில்லை.