/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டீக்கடைக்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
/
டீக்கடைக்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : செப் 16, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், உத்தமசோழபுரம், பங்களாகாட்டை சேர்ந்தவர் வெங்கடேசன், 35. கரபுரநாதர் கோவில் அருகே டீக்கடை நடத்துகிறார்.
நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 2.4 பவுன், 17,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அவர் புகார்படி கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.