/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு 19,000 கன அடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர் திறப்பு 19,000 கன அடியாக உயர்வு
ADDED : செப் 05, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கேற்ப அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
அதன்படி நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு, 15,530 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 15,888 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணை நீர்மட்டம், 116.39 அடி, நீர் இருப்பு, 87.82 டி.எம்.சி.,யாக இருந்தது.அதேநேரம் அணையில் இருந்து டெல்டா பாசன நீர் திறப்பு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 13,500 கனஅடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று காலை முதல், 19,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.