/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் - பைக் மோதல் வடமாநில தொழிலாளி பலி
/
மொபட் - பைக் மோதல் வடமாநில தொழிலாளி பலி
ADDED : ஜூலை 04, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி : உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் மணீஷ், 26. சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஜரிகை போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த, 30 இரவு, 8:30 மணிக்கு இளம்பிள்ளை- - காகாபாளையம் சாலையில் ஆலங்காட்டா-னுாரில், 'பிளாட்டினா' பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
முன்புறம் சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றார். அப்போது, எதிரே வந்த, 'டியோ' மொபட் மீது மோதியதில், மணீஷ், பஸ்சில் சிக்கி சிறிது துாரம் இழுத்துச்செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். மகுடஞ்சாவடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.