sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆடிபெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்

/

ஆடிபெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்

ஆடிபெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்

ஆடிபெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்


ADDED : ஜூலை 23, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : ஆடிபெருந்திருவிழா முன்னிட்டு இன்று கோட்டை மாரி-யம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

சேலத்தில் பிரசித்து பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா இன்று முதல் ஆக.,16 வரை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த, 7ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழா முன்னிட்டு இன்று இரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடைபெற உள்ளது. நாளை காலை 10:00 முதல் 11:00 மணிக்குள் கொடியேற்றம், 24 முதல், 29 வரை தினமும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

வரும், 30ல் இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடுதல், திருக்கல்-யாணம், 31 முதல் ஆக.,6 வரை இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, ஆக.,3ல் இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5ல், இரவு, 7:00 மணிக்கு சக்தி அழைப்பு, 6ல் காலை, 8:00 மணிக்கு சக்தி கரகம் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 8,9 ல் பொங்கல், உருளுதண்டம், 10ல் கம்பம் விடுதல், 11ல் இரவு, 11:30 மணிக்கு சப்தாபரணம், 12ல் மதியம், 1:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, பிற்பகல், 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. 13ல் காலை, 10:00 மணிக்கு கொடியிறக்கம், பால்குட ஊர்வலம், அம்மனுக்கு மகா அபிஷேகம், 14ல் மதியம், 12:00 மணிக்கு மகா அபிஷேகம், நைவேத்யம், 15ல் மதியம், 12:00 மணிக்கு சுதந்திர தின சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து, 16ல் மாலை, 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us