/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரதான சாலையில் எதிரெதிரே 'டாஸ்மாக்' 'பார்' ஆக மாறிய ஓட்டல், பெட்டி கடைகள்
/
பிரதான சாலையில் எதிரெதிரே 'டாஸ்மாக்' 'பார்' ஆக மாறிய ஓட்டல், பெட்டி கடைகள்
பிரதான சாலையில் எதிரெதிரே 'டாஸ்மாக்' 'பார்' ஆக மாறிய ஓட்டல், பெட்டி கடைகள்
பிரதான சாலையில் எதிரெதிரே 'டாஸ்மாக்' 'பார்' ஆக மாறிய ஓட்டல், பெட்டி கடைகள்
ADDED : செப் 02, 2024 02:20 AM
மகுடஞ்சாவடி: பிரதான சாலையில் எதிரெதிரே செயல்படும் டாஸ்மாக் கடை-களால், அங்குள்ள ஓட்டல், பெட்டிக்கடைகள் பாராக மாறியுள்-ளன. இதனால் அப்பகுதியில் செல்லவே பெண்கள் அச்சப்படு-கின்றனர்.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில், இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலையில், பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே சாலை எதிர் எதிரே இரு டாஸ்மாக் கடைகள் உள்-ளன. அங்கு, 'பார்' வசதி இல்லை.
இதனால் தினமும், 100க்கும் மேற்பட்ட, 'குடி'மகன்கள், சாலை அருகே கும்பலாக அமர்ந்தும், நின்றும் மது அருந்துகின்றனர். அருகே உள்ள பெட்டி கடைகள், ஓட்டல்களில் குடிக்க அனுமதிக்கின்றனர். இதனால், அந்த இடங்கள்,
'பார்' ஆகவே மாறியுள்ளன.குறிப்பாக சாலையில் இருசக்கர வாகனங்களை இருபுறமும் நிறுத்-திவிடுகின்றனர். மேலும், 'குடி'மகன்கள் தள்ளாடியபடி சாலையை கடப்பதால் மற்ற வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.சில, 'குடி'மகன்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவை தட்-டியும் அட்டகாசம் செய்கின்றனர். இதனால் பிரதான சாலை வழியே செல்லவே, பெண்கள் அச்சப்படும் அவலம் தொடர்கி-றது.டாஸ்மாக் கடைகளில் இருந்து, 500 மீ.,ல், இடங்கணசாலை பஸ் ஸ்டாண்ட் உள்ளது. அங்கும் மது அருந்தும் 'குடி'மகன்கள், பஸ்-சுக்கு காத்திருக்கும் பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு 'தொல்லை' தருகின்றனர். சிலர்
அங்கேயே வாந்தி எடுத்து, 'மட்-டை'யாகின்றனர். விபத்தை தடுக்கவும், பெண்கள், மாணவியர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இரு டாஸ்மாக் கடைகளையும் இடமாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்-பகுதி
பெண்கள் வலியுறுத்தினர்.