/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 22, 2024 01:36 AM
மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு பேரணி
ஓமலுார், ஆக. 22-
ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் கோசலை தலைமை வகித்தார். பள்ளி மேலாண் குழுவின் குணசேகரன் தொடங்கி வைத்தார். முத்துநாயக்கன்பட்டி நகர் பகுதியில் பேரணி சென்றது. வழியில் மழைநீர் சேகரிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை, மாணவர்கள்
மக்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் கோசலை பேசுகையில், ''நிலத்தடி நீர்மட்டம் உயர, நாம் மழைநீரை சேகரிப்பது அவசியம். அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு சாதனம் அமைக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மஞ்சப்பை பரிசாக வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் மாதையன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.