sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்

/

ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்

ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்

ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்


ADDED : செப் 17, 2024 01:41 AM

Google News

ADDED : செப் 17, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த

மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்

ஈரோடு, செப். 17-

சென்னிமலை யூனியன் புஞ்சை பாலத்தொழுவு, வசந்தம் நகர் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைத்து, மனு வழங்கி கூறியதாவது:

கடந்த, 2016ல் பெரும்பள்ளம் ஓடைகரையில் வசித்து வந்த எங்களது, 520 வீடுகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. வீடுகளை இழந்தவர்களுக்கு அதே பகுதி, வசந்தம் நகரில் வீட்டுமனை பட்டா வழங்கியது. தற்போது, 150 குடும்பத்தினர் வசிக்கிறோம். பல்வேறு போராட்டங்களுக்கு பின், 5 ஆண்டுக்கு முன், சென்னிமலை - ஊத்துக்குளி சாலையில் இருந்து வசந்தம் நகர் குடியிருப்பை இணைக்கும் சாலைக்கும், குடியிருப்பு பகுதிக்கும் உள்ள இரட்டை சாலைகளுக்கும், ஒற்றை கப்பி சாலை அமைத்தனர். 6 மாதத்துக்குள் தார்ச்சாலையாக மாற்றி தருவதாக தெரிவித்தனர்.

இதுவரை அதே நிலையில் சாலை உள்ளதால், நடந்து செல்வதே சவாலாக உள்ளது. கடந்த, 4 ஆண்டுகளாக தொடர்ந்து மனு வழங்கியும் பலனில்லை. இதை வலியுறுத்தி எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்தோம். இவ்வாறு கூறினர். மனுவை பெற்ற டி.ஆர்.ஓ., சாந்தகுமார், 'நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us