/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பலி
/
விபத்தில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பலி
ADDED : ஆக 20, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் உயிரிழந்தார்.
தலைவாசல் அருகே, வீரகனுார், ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 62. அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், நேற்று கெங்கவல்லியில் இருந்து, தெடாவூர் வழியாக வீரகனுார் நோக்கி 'டிவிஎஸ் - பீனிக்ஸ்' பைக்கில் சென்றுள்ளார்.
நேற்று இரவு, 7:30 மணியளவில், தெடாவூர் பஸ் ஸ்டாப் வழியாக வந்த, அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இந்த விபத்தில், பைக் ஓட்டி வந்த பொன்னுசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

