sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் மருத்துவர்கள், செவிலியர் அஞ்சலி பேரணி, ஆர்ப்பாட்டம்

/

சேலம் மருத்துவர்கள், செவிலியர் அஞ்சலி பேரணி, ஆர்ப்பாட்டம்

சேலம் மருத்துவர்கள், செவிலியர் அஞ்சலி பேரணி, ஆர்ப்பாட்டம்

சேலம் மருத்துவர்கள், செவிலியர் அஞ்சலி பேரணி, ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 17, 2024 04:39 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,: கோல்கட்டாவில், பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள். செவிலியர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணி சென்றனர்.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பெண் பயிற்சி மருத்துவர் கடந்த, 8ல் இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்-பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவர்கள் போராட்-டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் என, 200 க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பேரணி சென்-றனர். மேலும், தமிழ்நாடு அணைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தலைவர் அருணாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலி-யுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பின் செய-லாளர் ஜெயக்குமார், பொருளாளர் தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us