sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேகோ சுமை தொழிலாளர் கூலி உயர்வுக்கு ஆர்ப்பாட்டம்

/

சேகோ சுமை தொழிலாளர் கூலி உயர்வுக்கு ஆர்ப்பாட்டம்

சேகோ சுமை தொழிலாளர் கூலி உயர்வுக்கு ஆர்ப்பாட்டம்

சேகோ சுமை தொழிலாளர் கூலி உயர்வுக்கு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 03, 2024 07:34 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், : சேகோ - ஸ்டார்ச் சுமைதுாக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில், சேலம், செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட் எதிரே, கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் ஜில்லா சுமைதுாக்கும் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்-துக்கு, தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

அதில் சுமைப்பணி சம்மேளன மாநில தலைவர் வெங்கடபதி பேசுகையில், ''சேலம் மாநகரில் உள்ள சேகோ, ஸ்டார்ச் குடோன்களில், 300க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலா-ளர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்களுக்கு, 30 மாத கூலி ஒப்பந்தம், 2024 மார்ச், 20ல் முடிந்து, 4 மாதங்கள் ஆகியும், புது ஒப்பந்தம் போடாமல் சேகோ, ஸ்டார்ச் வியாபாரிகள் தாமப்படுத்தி வருகின்றனர். அத்-யாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்தும் கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பதை நிறுத்திவிட்டு உடனே தொழிற்-சங்கத்துடன் பேசி புது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற கோஷம் எழுப்பினர். சங்க பொதுச்செயலர் கோவிந்தன், கிளை செயலர் தண்டபாணி, உதவி செயலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us