/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பதவி உயர்வு பெற்று இடமாறுதல் பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு மாணவியர் கண்ணீர் மல்க பிரியா விடை

ADDED : ஜூலை 23, 2024 01:11 AM
சேலம் : சேலத்தில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இடமா-றுதல் பெற்ற, அரசு பள்ளி ஆங்கில ஆசிரியருக்கு மாணவியர் கண்ணீர் மல்க பிரியா விடை அளித்தனர்.
சேலம் குகை மூங்கப்பாடி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஸ்ரீராம், 16 ஆண்டுகளாக பணி-யாற்றி வருகிறார். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளி உட்-கட்டமைப்பு வசதி மற்றும் மாணவியரின் படிப்புக்கும் பல்வேறு வகையில் உதவியுள்ளார்.
பள்ளியில் படிக்கும் மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்ற ஸ்ரீராம், தற்போது தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை பள்ளிக்கு இடமாறுதல் பெற்றார்.
நேற்று பள்ளியில் ஆசிரியருக்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்-தது. அப்போது மாணவியர், ஆசிரியர் ஸ்ரீராமை பிரிய மனமில்-லாமல் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். மேலும் உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணியாற்றிய உதவி-யாளர்கள் உட்பட அனைவரும் கண்கலங்கி வாழ்த்துக்கள் தெரி-வித்து வழி அனுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவியர் கூறுகையில்,'ஆங்கில ஆசிரியர் ஸ்ரீராம், மிகவும் அன்பான முறையில் நடந்துக்கொள்வார். பல ஆண்டுகா-லமாக பணியாற்றிய ஆசிரியர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று செல்வதில் மகிழ்ச்சி இருந்தாலும், நாங்கள் நல்ல ஆசிரியரை இழப்பது வேதனையாக உள்ளது' என்றனர்.