/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் அவதி
/
ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் அவதி
ADDED : ஆக 13, 2024 07:38 AM
மொரப்பூர்: ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொது-மக்கள் பாதையை கடக்க முடியாமல், அவதிப்பட்டு வருகின்-றனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் இருந்து, சிந்தல்பாடி செல்லும் சாலையில், ஆவலம்பட்டியில் ரயில்வே பாலம் உள்ளது. இதன் கீழே உள்ள சுரங்கப்பாதை வழியாக, சிந்தல்பாடி, கர்த்தானுார், ராமியணஹள்ளி, தென்கரைகோட்டை, அ.பள்ளிப்பட்டி உள்-ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். கடந்த, சில நாட்களாக பெய்த தொடர்மழையால், சுரங்கப்பா-தையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதையை கடக்க முடி-யாமல், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில், கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில், சுரங்க பாதையில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க, நிரந்தர தீர்வு காணவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

