/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணவரை காணவில்லை போலீசில் மனைவி புகார்
/
கணவரை காணவில்லை போலீசில் மனைவி புகார்
ADDED : செப் 04, 2024 09:16 AM
ஓமலுார்: வேலைக்கு செல்வதாக கூறி சென்ற, அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியரை காணவில்லை என, அவரது மனைவி போலீசில் புகார் அளித்-துள்ளார்.
ஓமலுார், சாஸ்தா நகரில் வசித்து வருபவர் முருகன், 54. மணியக்காரனுார் அரசு நடு-நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரு-கிறார். மனைவி ராஜாத்தி, 44. நேற்று முன்-தினம் காலை, 7:45 மணிக்கு முருகன் வழக்க-மாக பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அன்று இரவு வீட்டுக்கு வரவில்லை.
இது குறித்து பள்ளியில் உள்ள ஆசிரியரி-டத்தில், ராஜாத்தி விசாரித்த போது, முருகன் விடுமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாத்தி, நேற்று தனது கணவரை காணவில்லை என, ஓமலுார் போலீசில் புகார் அளித்துள்ளார்.