/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் கோட்டத்தில் 78 ரயில் நிலையங்களில் கியூ.ஆர்., கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

ADDED : ஆக 20, 2024 03:21 AM
சேலம்: சேலம் கோட்டத்தில், 78 ரயில் நிலையங்களில், கியூ.ஆர்., கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
ரயில்வே நிர்வாகம் சார்பில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, ஊட்டி உள்ளிட்ட, 78 ரயில் நிலையங்களில் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத, நடைமேடை டிக்கெட்டுகள் பெற அனைத்து கவுன்டர்களிலும் கியூ.ஆர்., குறியீடு சாதனம் நிறுவப்பட்டு உள்ளது.
பீம், பேடிம், ஜிபே, போன் பே போன்ற பல டிஜிட்டல் கட்டண தளங்கள் மூலம், தடையற்ற பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இந்த புதிய முயற்சியானது, கியூ.ஆர்., குறியீட்டில் ஸ்கேன் செய்து, பணமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குவதன் மூலம், பயணி
கள் சிரமமின்றி டிக்கெட்டுகளை
முன்பதிவு செய்ய முடியும்.
இந்த வசதியால், அனைத்து டிக்கெட் கவுன்டர்களிலும், பயணிகள் இப்போது டிக்கெட்டுகளை வாங்குவதற்கான விரைவான மற்றும் வசதியான வழியை அனுபவிக்க முடியும். இதனால் வரிசையில் செலவழிக்கும் நேரத்தை குறைக்கிறது.