ADDED : ஆக 02, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட ஏரி, குட்டைகளில் மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடுவனேரி, கோட்டைபுதுாரில் உள்ள ஏரியில், நேற்று மதியம், 3:30 மணிக்கு டிப்பர் லாரிகளில் மண் ஏற்றியவர்கள், கே எம்.ஆர்., நகர் வழியே அதிவேகமாக சென்றனர். அப்போது இருசக்கர வாகனங்கள் மீது மோதுவதுபோல் சென்றனர். இதனால் மக்கள், லாரிகளை சிறைபிடித்து, டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின் மக்கள், வேகமாக செல்லக்கூடாது என எச்சரித்து, லாரிகளை அனுமதித்தனர்.