/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை புற்றுநோய் கதிரியக்க இயந்திர துவக்க விழா
/
நாளை புற்றுநோய் கதிரியக்க இயந்திர துவக்க விழா
ADDED : ஆக 08, 2024 01:45 AM
சேலம்,
சேலம் சண்முகா மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ பிரிவில் இரண்டாவதாக புற்றுநோய் கதிரியக்க இயந்திரம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாளை காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், 'பிக்பாஸ் சீசன்' -4 வெற்றியாளரான, நடிகர் ஆரி அர்ஜூனன், இயந்திரத்தை தொடங்கி வைப்பர்.
தொடர்ந்து கவுரவ விருந்தினர்களான சேலம் நியூரோ பவுண்டேசன் மருத்துவமனை முதன்மை இயக்குனர் நடராஜன், சேலம் எஸ்.பழனியாண்டி முதலியார் மெமோரியல் மருத்துவமனை நிறுவனர் தேவராஜனை, சண்முகா மருத்துவமனை நிறுவனர் பன்னீர் செல்வம் கவுரவிப்பார். இதில் சண்முகா மருத்துவமனை முதன்மை இயக்குனர் பிரபுசங்கர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்னா, புற்றுநோயை தடுக்கும் ஆரோக்கிய வாழ்வியல் முறை குறித்து பேச உள்ளனர்.