/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீதாராம்யெச்சூரிக்கு இ.கம்யூ., அஞ்சலி
/
சீதாராம்யெச்சூரிக்கு இ.கம்யூ., அஞ்சலி
ADDED : செப் 14, 2024 01:55 AM
சீதாராம்யெச்சூரிக்கு இ.கம்யூ., அஞ்சலி
சேலம், மா.கம்யூ., பொதுச்செயலர் சீதாராம்யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே, சேலம் மாவட்ட இ.கம்யூ., சார்பில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் மோகன் தலைமை வகித்து, சீதாராம் யெச்சூரி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட துணை செயலர்கள் கந்தன், ராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே இரங்கல் கூட்டம், அமைதி ஊர்வலம் நடந்தது. மா.கம்யூ., தாலுகா செயலர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு குணசேகரன், இ.கம்யூ., மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சடையன், தி.மு.க., நகர செயலர் பாலசுப்ரமணியம், காங்., வி.சி., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.