/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு 7,979 ஆசிரியர்கள் அதிருப்தி
/
3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு 7,979 ஆசிரியர்கள் அதிருப்தி
3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு 7,979 ஆசிரியர்கள் அதிருப்தி
3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு 7,979 ஆசிரியர்கள் அதிருப்தி
ADDED : ஆக 03, 2024 01:26 AM
சேலம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 2006 - 07ல், 'அனைவருக்கும் கல்வி' திட்டத்தில், 6, 7, 8ம் வகுப்புகளுக்கு, 7,979 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. திட்ட நிதியில் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் என்பதால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது. 2021ல் வழங்கிய ஆணை, கடந்த மார்ச், 31ல் நிறை
வடைந்தது.
இதையடுத்து ஆணை வழங்க தாமதம் ஏற்பட, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஏப்ரல் முதல் ஜூன் வரை, பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது ஜூலை சம்பளத்தை பெற முடியாத சூழல் உருவாக, மீண்டும், 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'தற்போது, 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவதால், ஒரு மாத தாமதத்துக்கு பின் சம்பளம் பெற வேண்டியுள்ளது. இதனால் திட்ட நிதியில் ஏற்படுத்தப்பட்ட, 7,979 ஆசிரியர்களும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்'
என்றனர்.