ADDED : பிப் 23, 2024 01:57 AM
ஓமலுார்:ஓமலுார், கோட்டையில் உள்ள வசந்தீஸ்வரர் கோவில் கும்பாபி ேஷக விழா நேற்று நடந்தது. அதில் காலை, 9:35 மணிக்கு மூலஸ்தான கோபுரம், விநாயகர் கோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஓமலுார் தீயணைப்பு வாகனம் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதையொட்டி வசந்தீஸ்வரர், அபிதகுஜாம்பாள் சுவாமி, விநாயகர், சரபங்கா முனிவர் ஜீவசமாதி ஆகியவற்றுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, செயல் அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள், சரபங்கா அறக்கட்டளை நிர்வாகிகள், உள்ளூர் அரசியல் கட்சியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி, இருசனம்பட்டி முத்து குமாரசாமி கோவில் கும்பாபி ேஷக விழா நடந்தது. சிவாச்சாரியார்கள், மேள தாளம் முழங்க, புனிதநீர் கலசங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, 11:00 மணிக்கு கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகத்தை நடத்தி வைத்தனர். பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்களுக்கு புனித நீரால் அபி ேஷகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.