/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வருவாய்த்துறையினர்கண்டன ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறையினர்கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 08, 2025 01:49 AM
வருவாய்த்துறையினர்கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம்:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி, மாவட்ட செயலர் முருகபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில்
கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். துறை அலுவலர்களின் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், மூன்றாண்டுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பினை, 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

